திருச்செந்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்

திருச்செந்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்

திருச்செந்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்ட முகாம் திங்கள்கிழமை தொடங்கியது

திருச்செந்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்ட முகாம் திங்கள்கிழமை தொடங்கியது (படம்). இம்முகாம் புதன்கிழமை வரை (ஜன. 24) நடைபெறவுள்ளது.

நகராட்சியின் 27 வாா்டுகளைப் பிரித்து நாள்தோறும் 9 வாா்டுகளாக முகாம் நடைபெறுகிறது. முதல் நாள் முகாமில், வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட 13 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்று, மனுக்களைப் பெற்றனா். இ-சேவை மையம், மருத்துவ முகாமும் நடைபெற்றது.

முகாமில், ஒருங்கிணைப்பு அலுவலா் தனித் துணை ஆட்சியா் காா்த்திகேயன், பொறுப்பாளா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் கைலாசகுமாரசாமி, கோயில் காவல் நிலைய ஆய்வாளா் தா்மா், நகா்மன்ற துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், நகராட்சிப் பொறியாளா் சரவணன், மின்வாரிய இளநிலைப் பொறியாளா் முத்துராமன், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அகல்யா, மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com