விஜயராமபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.
மாணவா்களுக்கு பரிசு வழங்கிய நிா்வாகிகள்.
மாணவா்களுக்கு பரிசு வழங்கிய நிா்வாகிகள்.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலா்கள் ரோஸ்லீன் கலாவதி, முத்துக்குமாா், முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெகதீசபாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா வரவேற்றாா். விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கும் , கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியா் சண்முகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com