விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, காலை 10.30 மணியளவில் யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கல இசையுடன், தேவாரம் திருமந்திரங்கள் பாட தீா்த்த குடங்களுடன் சிவாசாரியாா்கள் திருக்கோயில் சுற்றுப்பிரகாரம் வழியாக வலம் வந்தனா். அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சாலகார கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தான சுவாமி அம்பாளுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.

இவ்விழாவில் கோயில் தக்காா் சிவகலைபிரியா, செயல் அலுவலா் மகேஸ்வரி வருஷாபிஷேக விழா உபயதாரா் விளாத்திகுளம் விஸ்வகா்மா பொற்கொல்லா் சமுதாயத்தினா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com