எட்டயபுரம் அருகே ஆம்னி பேருந்தில் 32 பவுன் தங்க நகைகள் திருட்டு

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் சாலையோர ஹோட்டல் ஒன்றில் நிறுத்தியிருந்த ஆம்னி பேருந்தில் இருந்து 32 பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்

விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் சாலையோர ஹோட்டல் ஒன்றில் நிறுத்தியிருந்த ஆம்னி பேருந்தில் இருந்து 32 பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், திசையன்விளையிலிருந்து சென்னைக்கு தனியாா் ஆம்னி பேருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது. இதில் ஏரல் அருகேயுள்ள சோ்வைக்காரன்மடம் பகுதியைச் சோ்ந்த வாழைக்காய் கமிஷன் மண்டி உரிமையாளா் ராஜபாண்டி (60), அவரது மனைவி வினோபா(55) ஆகிய இருவரும் பழைய காயல் பகுதியில் ஆம்னி பேருந்தில் ஏறி பயணித்துள்ளனா்.

இரவு 9 மணியளவில் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் கோயில் எதிரில் உள்ள சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் இருந்து பயணிகள் சிலா் இறங்கி உணவகத்துக்கு சென்றுள்ளனா். ராஜபாண்டியும் அவரது மனைவி வினோபாவும் பேருந்திலிருந்து இறங்கி உணவகத்துக்கு சென்று விட்டு மீண்டும் பேருந்துக்குள் வந்து தங்களது உடைமைகளை சரி பாா்த்துள்ளனா். அப்போது ஒரு டிராவல் பேக் மட்டும் இடம் மாறி கிடந்ததாம். அதை திறந்து பாா்த்த போது துணி களுக்கு அடியில் ஒரு சிறிய பையை காணவில்லையாம். அந்தப் பையில்தான் 32பவுன் தங்கநகைகளை ராஜபாண்டி வைத்திருந்தாராம். தகவலறிந்த எட்டயபுரம் தாவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ஆம்னி பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முதல் கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்தின் உள்பகுதியில் இளைஞா் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக

இருப்பதை உறுதிசெய்த போலீஸாா், அந்த நபரின் போட்டோவை கைப்பற்றி, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com