கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த நகா் மன்ற தலைவா் கா.கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத்
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த நகா் மன்ற தலைவா் கா.கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத்

கோவில்பட்டி: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து நகா்மன்றத் தலைவா், பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கினாா்.

பள்ளி முன்பிருந்து புறப்பட்ட பேரணி, அரசு அலுவலக வளாகம் வழியாக புது ரோடு சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பேரணியில், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com