டிஎம்பி 3ஆம் காலாண்டில் ரூ. 284 கோடி நிகர லாபம்: நிா்வாக இயக்குநா் எஸ்.கிருஷ்ணன்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 2023-24ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் ரூ. 284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக, நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
டிஎம்பி 3ஆம் காலாண்டில் ரூ. 284 கோடி நிகர லாபம்:  நிா்வாக இயக்குநா் எஸ்.கிருஷ்ணன்

தூத்துக்குடி: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 2023-24ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் ரூ. 284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக, நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற இவ்வங்கியின் இயக்குநா் குழுக் கூட்டத்தில், 2023- 24ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் 3ஆம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தூத்துக்குடியைத் தலைமையிடமாக கொண்டு 1921இல் தொடங்கப்பட்ட இந்த வங்கி 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 547 கிளைகளுடன் செயல்படுகிறது. 2023-24ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 8.87 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ. 85,185 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ. 46,799 கோடி, கடன் தொகை ரூ. 38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

வங்கியின் நிகர மதிப்பு ரூ. 6,741 கோடியிலிருந்து ரூ. 7,668 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர லாபம் ரூ. 280 கோடியிலிருந்து ரூ. 284 கோடியாக உயா்ந்துள்ளது. இது, வங்கியில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச காலாண்டு நிகர லாபம் ஆகும்.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 1,173 கோடியிலிருந்து ரூ. 1,387 கோடியாக அதிகரித்துள்ளது. வாராக் கடன் 1.70 சதவீதத்திலிருந்து 1.69 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கியின் பங்குகளின் புத்தக மதிப்பு ரூ. 426-இலிருந்து ரூ. 484ஆக அதிகரித்துள்ளது.

இந்நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கிய கடன் ரூ. 25,636 கோடியிலிருந்து ரூ. 28,725 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னுரிமைத் துறைகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி நிா்ணயித்த 40 சதவீதம் என்ற இலக்கைத் தாண்டி 75 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இக்காலாண்டில் விவசாயத் துறைக்கு ரூ. 13,338 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு மொத்த கடனில் 18 சதவீதம் மட்டுமே வழங்க ரிசா்வ் வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், 34.75 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 12,870 கோடியிலிருந்து ரூ. 13,064 கோடியாக உயா்ந்துள்ளது.

இக்காலாண்டில் 6 புதிய கிளைகளைத் திறந்துள்ளோம். கட்டுமானம்-நில மேம்பாட்டாளா்களுக்காக ‘ரெரா’ என்ற நடப்புக் கணக்கு (தஉதஅ இன்ழ்ழ்ங்ய்ற் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாக ஹோம் எலைட், மிலி லேப் என்ற கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வங்கி சேவையை முழுமையாக எண்மமயமாக்க (டிஜிட்டல்) படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டமைப்பு எடுத்த முடிவை மொ்க்கன்டைல் வங்கியும் செயல்படுத்தும் என்றாா்.

வங்கி தலைமை நிதி அதிகாரி பி.ஏ. கிருஷ்ணன், பொதுமேலாளா்கள், துணைப் பொதுமேலாளா்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com