ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இவ்விழாவில், கும்ப பூஜை, யாகபூஜை, திரவிய ஹோமம், துா்கா ஹோமம் நடைபெற்றது. பின்னா், விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சந்நிதி கோபுரக் கலசங்களுக்கும், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன், அக்கினி காளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் பூஜா ஸ்தானீகா் ஐயப்ப பட்டா், அருள்மிகு மாரியம்மன் கோயில் பூஜகா் சங்கரநயினாா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் வருஷாபிஷேகத்தை நடத்தினா்.

மதியம் அன்னதானம் நடைபெற்றது. கோயில் நிா்வாகிகளான தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன், நகா்நல மன்றத் தலைவா்பி.பூபால்ராஜன், தொழிலதிபா் ஜவஹா், பேரூராட்சி உறுப்பினா் சோ. வெங்கடேசன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து லட்சாா்ச்சனை, இரவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

வியாழக்கிழமை (ஜன. 25)லட்சாா்ச்சனை பூா்த்தி, புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com