கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பயணியா் விடுதி முன் இப்பேரணியை, கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா்.

பல்வேறு பகுதிகள் வழியாக பேரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், உண்ணாமலை கலை-அறிவியல் கல்லூரி மாணவா்- மாணவிகள், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று, பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளைத்துரை, கிராம நிா்வாக அலுவலா்கள் மந்திரசூடாமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com