சாகுபுரம் ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில்

சாகுபுரம் ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில் ஜீரணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
விமான கலசத்திற்கு நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
விமான கலசத்திற்கு நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

ஆறுமுகனேரி: சாகுபுரம் ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில் ஜீரணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

சாகுபுரம் ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி மாலை தீா்த்த சங்கரஹனம் நடைபெற்றது. ஆத்தூா் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வந்தனா். அதனைத் தொடா்ந்து கணபதி பூஜை, யாகசாலை ப்ரவேசம், வாஸ்து பூஜை நடைபெற்றது. 22ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமம், ஸுதா்சன ஹோமம், மஹாலட்சுமி பூஜை, கலா ஆகா்ஷனம், கோ பூஜை பூா்ணாஹுதியும், மாலை சதூா்வேத பாராயணனம், யாகசாலை ஹோமம், நவக்கிரஹ பூஜை, பூணாஹுதியும் நடைபெற்றது. 23ஆம் தேதி காலை நவக்கிரஹ பூஜை, ஸ்ரீஸுதா்சன மஹாலட்சுமி ஹோமமும், மாலை யந்திர நவரத்ன ஸ்தாபிதம், மிம்ப ஸ்தாபிதம், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதலும் நடைபெற்றது.கும்பாபிஷேக தினமான புதன்கிழமை காலை மஹா கணபதி பூஜை, நவக்கிரஹ பூஜை, பிம்ப ஸாந்தி, மூலமந்திர ஹோமமும் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து கும்ப புறப்பாடும் விமான அபிஷேகமும் நடைபெற்றது.ஸ்ரீ மங்கள விநாயகா், ஸ்ரீ காசி விசாலாஷி அம்மன் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதா் மற்றும் பரிவார மூா்த்தி விமானங்களுக்கு ஒரே நேரத்தில் விமான அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மஹா கும்பாபிஷேம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சகஸ்ரநாம அா்ச்சனை, ஸ்ரீமங்கள விநாயகா் வீதி உலா நடைபெற்றது. விழாவில் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை நிறுவன குடும்பத்தைச் சாா்ந்த வா்ஷாஜெயின், நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஸ்ரீனிவாசன், நந்தினி ஸ்ரீனிவாசன் மற்றும் உதவித் தலைவா்கள், மூத்த அதிகாரிகள், அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com