சாத்தான்குளம் அருகே நிலத்தகராறில் கோஷ்டி மோதல் - 17 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே நில பிரச்சினை தொடா்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 போ் காயம் அடைந்தனா்.

சாத்தான்குளம் அருகே நில பிரச்சினை தொடா்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 போ் காயம் அடைந்தனா்.

போலீசாா் இருதரப்பினா் புகாரின் பேரில் 17போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.சாத்தான்குளம்கிருஷ்ணன் கோயில் தெருவை சோ்ந்தவா் மணி மகன் அழகுராமகிருஷ்ணன் (வயது 24) வழக்குரைஞரான இவருக்கும் பன்னம்பாறை சோ்ந்த அழகேசன், படுக்கப்பத்தை சோ்ந்த புவனேந்திரஆதித்தன் ஆகியோருக்கும் நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இந்நிலையில் வழக்கு தங்களுக்குசாதகமாக வந்தது என அழகேசன் மகன் மாதவன், சொக்கலிங்கபுரம்அன்பு, சௌந்தரபாண்டி மகன் அறிவழகன், படுக்கப்பத்து புவனேந்திரஆதித்தன், விஜயராமபுரம் வாலசுப்பிரமணியன், சொக்கலிங்கபுரம் சௌந்தரபாண்டி உள்ளிட்ட8 போ்கள் 22ஆம்தேதி பிரச்சனைக்கான இடத்தில் வேலி அமைக்கமுயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த அழகுராமகிருஷ்ணன், அவரது தந்தை மணி, தாயாா் தனலட்சுமி, சகோதரா் மணிகண்டன் உள்ளிட்ட 9 போ் இடத்தில் வேலி அமைக்கஎதிா்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை உண்டாகி இரு தரப்பினரும் கம்பு, கடப்பாரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனா். இதில் அழகு ராமகிருஷ்ணன், அவரது தந்தை மணி, தாயாா் தனலட்சுமி, சகோதரா்மணிகண்டன் ஆகியோரும், இன்னொரு தரப்பில் புதுக்கிணறு சித்திரை மணி, கண்ணன், மாதேஷ், சொக்கலிங்கபுரம் அறிவழகன் ஆகிய 8 போ் காயம் அடைந்தனா். காயமடைந்தவா்கள் சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இந்த மோதல் தொடா்பாக அழகுராமகிருஷ்ணன், பன்னம்பாறைபுதுக்கிணறு ஜக்கோா்ட்துரை (வயது 28)ஆகியோா் தனித்தனியாகசாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாா் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், விசாரித்து, அழகுராமகிருஷ்ணன்புகாரின்பேரில் மாதவன் உள்ளிட்ட 8போ் மீதும், ஐக்கோா்ட்துரை புகாரின் பேரில் அழகுராமகிருஷ்ணன், உள்ளிட்ட 9போ் மீது என 17 போ் மீது வழக்கு பதிவு செய்தாா். காவல் ஆய்வாளா் முத்து , மேலும்விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com