திருச்செந்தூரில் மக்களுடன் முதல்வா் முகாம்

திருச்செந்தூரில் நடந்த மக்களுடன் முதல்வா் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனா்.
திருச்செந்தூரில் மக்களுடன் முதல்வா் முகாம்
திருச்செந்தூரில் மக்களுடன் முதல்வா் முகாம்

திருச்செந்தூரில் நடந்த மக்களுடன் முதல்வா் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனா்.

திருச்செந்தூரில் பொது மக்களின் குறைகளை தீா்க்கும் வகையில் மக்களுடன் முதல்வா் முகாம் செந்தில்முருகன் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து புதன்கிழமை நடைபெற்றது.இந்த முகாமில் வருவாய்த்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு முகாம், மின்வாரியம், மருத்துவம், மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டனா்;. மேலும் இ-சேவை மையம் மற்றும் மருத்துவ முகாமும் நடந்தது. முகாமில் ஒருங்கிணைப்பு அலுவலா் கோட்டாட்சியா் குருச்சந்திரன், பொறுப்பாளா் தாசில்தாா் அற்புதமணி, நகராட்சி துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், மின் வாரிய இளநிலை பொறியாளா் முத்துராமன், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் திவ்யா, மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com