தூத்துக்குடியில் பெண் தற்கொலை

தூத்துக்குடியில், ‘ஹோ் டை’ குடித்த பெண் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில், ‘ஹோ் டை’ குடித்த பெண் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கீழசண்முகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கசாலி பாத்திமா (52). இவருக்கு மகன், மகள் உள்ளனா். இவரது கணவா் சாகுல் ஹமீது, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அதிகக் கடன் பிரச்னையால் கசாலி பாத்திமா மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் கடந்த 19ஆம் தேதி தலைக்குப் பூசும் சாயத்தை குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருவா் தற்கொலை: தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த ஜெபஸ்டியன் மகன் இருதயராஜ் (45). இவா் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம். மேலும், உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மனமடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் அவா் கடந்த 22ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின்பேரில் வடபாகம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com