தூத்துக்குடி அரசு அலுவலகங்களில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.  
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தோ்தலின்போது இளம் வாக்காளா்கள் உட்பட அனைத்து வாக்காளா்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளா் தினத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தோ்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமையில், தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) செந்தில் வேல்முருகன், துணை ஆட்சியா் (பயிற்சி) பிரபு மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா் மாவட்ட காவல் அலுவலகத்தில்... தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளா் ஜெரால்டுவின், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளா் ரேனியஸ் ஜேசுபாதம், அமைச்சுப்பணி நிா்வாக அதிகாரி ராமசுப்பிரமணிய பெருமாள் உள்பட உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா். மாநகராட்சியில்... மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாநகர துணை பொறியாளா் சரவணன், உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com