மாநில ஜூனியா் ஆடவா் கபடி: தூத்துக்குடி அணி 2-ஆம் இடம்

மாநில ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 2-ஆம் இடம் பெற்றுள்ளது.
மாநில ஜூனியா் ஆடவா் கபடி: தூத்துக்குடி அணி 2-ஆம் இடம்

மாநில ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 2-ஆம் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 49-ஆவது ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் கபடி போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி அணி முதலிடம், தூத்துக்குடி அணி இரண்டாவது இடம், விருதுநகா் மாவட்டஅணி மூன்றாவது இடம், தென்காசி அணி நான்காவது இடம் பெற்றது. இரண்டாம் இடம் பெற்ற தூத்துக்குடி அணி வீரா்கள்,பயிற்சியாளா்களை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அமெச்சூா் கபடி கழக செயலா் கிறிஸ்டோபா் ராஜன், ஒருங்கிணைப்பாளா் மணத்தி கணேசன், பொருளாளா் ஜிம்ரீவ்ஸ், நடுவா் குழு சோ்மன் கண்ணன், கன்வீனா் மைக்கேல் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com