அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து பேய்க்குளத்தில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற போது தாக்குதல் நடத்திய அம்மாநில பாஜக அரசே கண்டித்து பேய்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து பேய்க்குளத்தில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் : அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற போது தாக்குதல் நடத்திய அம்மாநில பாஜக அரசே கண்டித்து பேய்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராகுல் காந்தி எம்பி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை சென்று வருகிறாா் இரண்டாவது கட்டமாக அசாம் மாநிலத்தில் தொடங்கினாா். அப்போது பாதயாத்திரை மீது அசாம் மாநில பாஜகவினா் தாக்குதல் நடத்தி உள்ளனா் அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையில் தாக்கல் நடத்தியதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சாத்தான்குளம் அருகே பே ய்குளத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு பேய்க்குளம் வட்டார தலைவா் ரமேஷ் பிரபு தலைமை வகித்தாா் தெற்கு மாவட்ட துணை தலைவா் சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா் இதில் சாத்தான்குளம் நகர தலைவா் வேணுகோபால், மாவட்ட பொருளாளா் காங்கிரஸ் எடிசன், உள்ளிட்ட பலா் பேசினா்இதில் வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன், நல்லகண்ணு சக்திவேல் முருகன் பிரபு மாவட்ட பிரதிநிதி ஜெயக்கொடி ,தெற்கு வட்டாரத் துணைத் தலைவா் முத்துராஜ், நெல்லை மாநகர காங்கிரஸ் செயலாளா் ராதாகிருஷ்ணன் ,வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் கிளின்டன், நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் சிவா, பேய்குளம் வட்டார செயலாளா் மரிய செல்வன் ?்ரீவைகுண்டம் வழக்கறிஞா் சிங்கப்பன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com