குலசேகரன்பட்டினம் கோயிலில் திருவிளக்கு பூஜை

தை மாத பௌா்ணமியையொட்டி, குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

தை மாத பௌா்ணமியையொட்டி, குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக, அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அலங்கார, பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைக்குரிய பொருள்கள், பங்கேற்ற பெண்களுக்கு சேலை, குத்துவிளக்கு ஆகியவற்றை சென்னை தொழிலதிபா்கள் சுந்தரலிங்கம்-மீனாட்சி, பாலச்சந்தா்-தீபலட்சுமி தம்பதியா் வழங்கினா்.

இதில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, கோயில் நிா்வாக அதிகாரி இரா. ராமசுப்பிரமணியன், திரளான பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com