ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் ரூ. 30 லட்சம் வெள்ள நிவாரண உதவி

கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கும் ரூ. 30 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய அரசு காஜி முஜிபுா் ரஹ்மான்.
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய அரசு காஜி முஜிபுா் ரஹ்மான்.

கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை இழந்தோருக்கும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கும் ரூ. 30 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில், அரசு காஜி முஜிபுா் ரஹ்மான் வழங்கினாா்.

மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வா் இம்தாதுல்லாஹ், துணை முதல்வா் அசராா், ஜமாத் உலமா சபை மாவட்ட துணைத் தலைவா் அப்துல் அழிம், மாவட்ட இணைச் செயலா் சதக்கத்துல்லா, மாவட்டச் செயலா் சம்சுதீன், பொருளாளா் முகைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com