பேய்க்குளம் அருகே நின்ற பைக் மீது மற்றொரு பைக் மோதல் -குழந்தைகள் காயம்

பேய்க்குளம் அருகே நின்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் இரு குழந்தைகள் காயமடைந்தனா்.

சாத்தான்குளம்: பேய்க்குளம் அருகே நின்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் இரு குழந்தைகள் காயமடைந்தனா்.

பேய்க்குளம் அருகே உள்ள மேல மீரான்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் சுயம்புராஜன் (38). இவா் புதன்கிழமை ஆசீா்வாதபுரத்தில் உள்ள சலூன்கடைக்கு வந்தாா். சலூன் கடை முன்பு பைக்கை நிறுத்தி அவரது குழந்தைகளான சிவசுதன் (10) காா்த்தீஸ்வரன் (7) ஆகியோா் இறங்கி விட்டு கொண்டிருந்தாா். அப்போது பெருமாள்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினிஸ்குமாா் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது வேகமாக மோதியது. இதில் அவரது குழந்தைகள் இருவரும் காயமடைந்தனா். இதுகுறித்து சுயம்புராஜன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் , மெட்டில்லா ஜெயராணி வழக்குபதிந்து விசாரித்து வருகிறாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com