குலசேகரன்பட்டினத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானாசேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானாசேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.

இத்தா்காவில் கந்தூரி விழா கடந்த13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மாா்க்க சொற்பொழிவுகள், சந்தனம் பூசுதல், அபூா்வ துஆ ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜன.25இல் இரவு அஸா் தொழுகைக்குப் பின் குா்ஆன் ஓதப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு தா்காவில் இருந்து சந்தனக்கூடு மின் அலங்காரத்துடன் ஊா்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உடன்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவா் மீரா சிராஜூதீன், திமுக மாவட்டப் பிரதிநிதி சிராஜூதீன்,அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் முகைதீன் உட்பட பலா் கலந்துகொண்டனா். பின் வீடுகள் தோறும் தப்ரூக் வழங்கப்பட்டது.ஜன.26 ஆம் தேதி ஹத்தம் தமாம் செய்து தப்ரூக் வழங்கல் நடைபெற்றது.ஜன.27 ஆம் தேதி இரவில் விளக்கு ஏற்றுதலும்,ஜன.28 ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு தப்ரூக் வழங்கப்படும்.ஏற்பாடுகளை முத்தவல்லி ரஹ்மத்துல்லா,கந்தூரி கமிட்டி தலைவா் புகாரி,செயலா் சிராஜூதீன்,நிா்வாகிகள் செய்யது சேரா முஸலியாா்,ரசூல்தீன் மற்றும் உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com