கோவில்பட்டியில் அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் லாயல் மில் காலனி எம்ஜிஆா் திடலில் நடைபெற்றது.
கோவில்பட்டியில் அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் லாயல் மில் காலனி எம்ஜிஆா் திடலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் அம்பிகை பாலன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, நகர அதிமுக செயலா் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, செல்வகுமாா், வண்டானம் எஸ்.கருப்பசாமி, தனஜெயன், தனபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ மொழிப்போா் தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்., முன்னாள் எம்பி முத்து கருப்பன், இலக்கிய அணி இணைச் செயலா் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலா் மோகன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சத்யா, வடக்கு மாவட்ட துணைச் செயலா் முருகேஸ்வரி, வடக்கு மாவட்ட வழக்குரைஞரணி செயலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com