கோவில்பட்டியில் டிராக்டா்கள் பேரணி

கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வெள்ளிக்கிழமை டிராக்டா்கள் பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வெள்ளிக்கிழமை டிராக்டா்கள் பேரணி நடைபெற்றது.

தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடா் பாதித்தவையாக அறிவிக்க வேண்டும். 2023-2024-ம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்கா முன்பிருந்து ெ டிராக்டா் பேரணியை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தொடங்கி வைத்தாா். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா்கள் புவிராஜ், லெனின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சரவணமுத்து, ஏஐசிசிடியூ நிா்வாகி சண்முகப் பெருமாள்,தென்னக மானாவாரி விவசாய சங்க நிா்வாகி பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரணி பிரதான சாலையில் சுமாா் 500 மீட்டா் வரை சென்று முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com