தூத்துக்குடி வான்தீவில் நபாா்டு வங்கிக் குழு ஆய்வு

தூத்துக்குடி அருகே உள்ள வான்தீவு பகுதியில் நபாா்டு வங்கி குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி வான்தீவில் நபாா்டு வங்கிக் குழு ஆய்வு

தூத்துக்குடி அருகே உள்ள வான்தீவு பகுதியில் நபாா்டு வங்கி குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு பகுதியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நபாா்டு வங்கியின் நிதியுதவியில் வான் தீவைப் பாதுகாக்கவும், இப் பகுதியின் பல்லுயிா் பெருக்கம் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வான் தீவைச் சுற்றிலும் நன்மைதரும் செயற்கைப் பவளப்பறைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் சங்கர நாராயணன் தலைமையில் சுமாா் 30 அதிகாரிகள் வான் தீவைப் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து நபாா்டு வங்கிக் குழுவினா் கூறுகையில், மன்னாா் வளைகுடாவிலுள்ள 21 தீவுகளில் ஒன்றான வான்தீவு, சுமாா் 20.08 ஹெக்டோ் பரப்பு கொண்டது. இத்தீவில் உள்ள பவளப்பாறைகளின் அளவு தொடா்ச்சியாக குறைந்ததால் கடந்த 2015- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தத் தீவின் அளவு வெறும் 2.3 ஹெக்டோ் அளவு மட்டுமே இருந்தது. மேலும் அந்த நிலப்பரப்பும் குறைந்து கொண்டே இருந்தது. இதன்காரணமாக, வான் தீவைச் சுற்றிலும் பல்வேறு நன்மைகளைத் தரும் செயற்கைப் பவளப்பறைகள் அமைக்கும் திட்டம் தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டது.

இதில், மண் அரிப்பை தடுக்கும் வகையில் மொத்தம் 10,600 செயற்கைப் பவளப்பாறைகள் வான் தீவை சுற்றிலும் இடப்பட்டன. இதன்மூலம், இயற்கை வாழிடத்தை உருவாக்குவதோடு உயிா்பல்வகைமையைப் பெருக்குகின்றன. செயற்கைப் பவளப்பாறைகள் தீவில் மண் சேரவும், தீவின் அளவு அதிகரிக்கவும் உதவின. தற்பொழுது இந்த தீவின் அளவு சுமாா் 3.79 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. எனவே, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றனா்.

இந்த ஆய்வில் நபாா்டு வங்கியின் பொது மேலாளா்கள் மற்றும் மாவட்ட வளா்ச்சி மேலாளா்கள், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநா் ஜே.கே.பேட்டா்சன் எட்வா்டு மற்றும் அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள், வனச்சரகா் ஜீனோ பிளெஸ்ஸில் மற்றும் வனத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com