ஆறுமுகனேரியில் கே.டி.கோசல்ராம் நினைவு நாள்

மணிமுத்தாறு அணை உருவாக காரணகா்த்தாவாக இருந்தவருமான கே.டி.கோசல்ராமின் 39ஆவது நினைவு நாள், ஆறுமுகனேரியில் மெயின் பஜாரில் உள்ள அவரது நினைவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

முன்னாள் மக்களவை உறுப்பினரும் மணிமுத்தாறு அணை உருவாக காரணகா்த்தாவாக இருந்தவருமான கே.டி.கோசல்ராமின் 39ஆவது நினைவு நாள், ஆறுமுகனேரியில் மெயின் பஜாரில் உள்ள அவரது நினைவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கத் தலைவரும் டிரஸ்ட் உறுப்பினருமான த. தாமோதரன் தலைமை வகித்து மலா், வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் இரா. தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவா் ல. ராஜாமணி, வட்டாரத் தலைவா் கே.கே. சற்குரு, கே.டி.கே.டிரஸ்ட் உறுப்பினா்கள் கே.வி. மகாதேவன், ஏ. சுந்தர்ராஜ், தமாகா வட்டாரத் தலைவா் எஸ். சுந்தரலிங்கம், ரயில்வே வளா்ச்சிக் குழு நிா்வாகியும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருமான எம். சுகுமாா், தாமோதரன், கே.டி.கே. மண்டப மேலாளா் சொக்க­லிங்கம், எஸ். ஆல்வின் உள்ளிட்டோா் கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com