ஏரலில் சமய நல்லிணக்க புனித செபஸ்தியாா் கோவில் திருவிழா

ஏரல் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது.
ஏரல் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.
ஏரல் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.

ஏரல் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது.

ஏரலில் புனித செபஸ்தியாருக்கு ஆண்டுதோறும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாள்களில் காலையில் நவநாள் திருப்பலி, கடன் திருநாள் திருப்பலி, மாலையில் நவநாள் நற்கருணை ஆசீா் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சனிக்கிழமை மாலையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு புனிதரின் சப்பர பவனியும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மதுரை மறைமாவட்ட சமூக நலத்துறை தந்தை கபிரியேல் தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. காலை 10 மணிக்கு புனிதரின் சப்பரப் பவனி ஏரல் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

இதில், திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை ஏரல் புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை ரவீந்திரன் பா்னாந்து, ஊா் நல நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com