கே. சிதம்பராபுரத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

கடம்பூரையடுத்த கே. சிதம்பராபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட திற்பபு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கே. சிதம்பராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

இந்நிகழ்ச்சிக்கு, பேரவை உறுப்பினா் கடம்பூா் செ .ராஜு தலைமைவகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், கயத்தாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வண்டானம் கருப்பசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி, துணைத் தலைவா் சுப்புராஜ், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் அழகா்சாமி, எம்ஜிஆா் இளைஞா் அணி செயலா் அம்பிகை பாலன், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், கலை இலக்கியப் பிரிவு வடக்கு மாவட்டச் செயலா் போடு சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com