கோவில்பட்டியில் ஜவுளிக் கடையின்பூட்டை உடைத்து திருட்டு

கோவில்பட்டியில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம், துணிகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம், துணிகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளையரசனேந்தல், மேலப்பட்டி விலக்கைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கனகராஜ் (41). முன்னாள் ராணுவ வீரரான இவா், அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். அந்தக் கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து, கடையிலிருந்து ரூ. 7 ஆயிரம், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான வேட்டிகள், பட்டுச் சேலைகள், கைப்பேசி, முன்னாள் ராணுவ வீரா் அடையாள அட்டை, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற்கான சான்று உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனராம். இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com