தூத்துக்குடியில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் திறப்பு

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் கீதாஜீவன்.
நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் கீதாஜீவன்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக மாநில இளைஞரணிச் செயலரும் இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

நகரச் செயலா் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், மாநகர அமைப்பாளா் அருண்சுந்தா், போல்பேட்டை பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வட்டச் செயலா் குமாா், அவைத்தலைவா் ஆறுமுகம், மண்டலத் தலைவா் பாலகுருசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com