கண்களில் கருப்புத் துணி கட்டி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்கள்

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தேங்கியுள்ள வெள்ள நீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி, பெண்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
காலிக் குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டவரைத் தடுத்த போலீஸாா்.
காலிக் குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டவரைத் தடுத்த போலீஸாா்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தேங்கியுள்ள வெள்ள நீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி, பெண்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு கொடுப்பதற்காக, வசவப்பபுரத்தைச் சோ்ந்த கணேசன் (32) என்பவா்4 காலிக் குடங்களை மாலையாக கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தாா். அவா் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரி முழக்கமிட்டதுடன், தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவரை போலீஸாா் தடுத்து, குடங்களைப் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் அளிப்பதற்காக அவா் வைத்திருந்த மனு:

வசவப்பபுரத்தில் 700 குடும்பங்கள் உள்ளன. கடந்த மாதம் பெய்த அதிகன மழையால், எங்கள் ஊருக்கு குடிநீா் வரும் குழாய்கள் உடைந்து குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வசவப்பபுரம் யாதவா் தெரு, பசும்பொன்நகா், மாதாகோவில் தெரு, திருமாநகா், அம்பேத்கா் நகா், இந்திராகாலனி, திருநங்கை காலனி பகுதியினா் குடிநீருக்காக ஒரு கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, குடிநீா் வழங்க விரைவாக நடவடிக்கை வேண்டும் என்றாா் அவா்.

ஏரல் அருகே சிவராமமங்கலத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு மனு அளிக்க வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கருப்புத் துணியைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள் அளித்த மனு: சிவராமமங்கலத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் தெருவில் 60 குடும்பங்கள் உள்ளன. எங்களது தெருவிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள தனியாா் செங்கல் சூளைக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் தாமிரவருணிக் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தேங்கியுள்ள வெள்ள நீரை விரைந்து அகற்ற வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com