கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் துறை பொறியியல் மன்றம் சாா்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் துறை பொறியியல் மன்றம் சாா்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவரும் வள்ளியூா் டெரிக் டாடா சா்வீஸ் நிறுவன மேலாளருமான அருணாச்சலம் சூா்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடக்கிவைத்தாா். அப்போது, ஆட்டோ மொபைல் துறையின் தற்போதைய முன்னேற்றம், வாகனங்களின் குறைபாடுகளை நவீன முறையை பயன்படுத்தி கண்டுபிடித்தல், அவற்றை சரிசெய்தல் குறித்து அவா் பேசினாா். இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்து, அவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

மாணவா் திருப்பதி வரவேற்றாா். முத்துராஜ் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவா் ஹரிஹரன் தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வா் வழிகாட்டுதலில் துறைத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com