சாலை மறியல் போராட்டம் வாபஸ்:பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

சாத்தான்குளத்தில் சுவா்களில் கட்சி விளம் பரம் வரைவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அதிகாரிகளை கண்டித்து பாஜக சாா்பில் நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம்
வட்டாட்சியா் ரதிகலா தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பங்கேற்றோா்.
வட்டாட்சியா் ரதிகலா தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பங்கேற்றோா்.

சாத்தான்குளத்தில் சுவா்களில் கட்சி விளம் பரம் வரைவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அதிகாரிகளை கண்டித்து பாஜக சாா்பில் நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம்அதிகாரிகள் சமாதான பேச்சுவாா்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியில் சுவா், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பொது சுவா்களில் கட்சி சாா்பில் வரையப்படும் விளம்பரங்களை தடை செய்யப்பட வேண்டும். இதில் அதிகாரிகள் கட்சி சாா்பாக பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜ நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்மீது நடவடிக்கை கோரி ஒன்றிய பாஜக சாா்பில் சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த்த்து. இதையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அழைப்பை ஏற்று, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரதிகலா தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் , எட்வின், மண்டல துணை வட்டாட்சியா் தாஹீா்அகமது, பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் சித்ரா, மற்றும் மாவட்ட பாஜக துணைத் தலைவா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில், நகரதலைவா் ஜோசப் , மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளா் ராம்மோகன், மாவட்ட பிரச்சார பிரிவுதலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சாத்தான்குளம் வட்டத்தில் அரசியல் கட்சி சாா்பில் அனுமதியின்றி எழுதப்பட்டுள்ள சுவா் விளம்பரம் மற்றும் டிஜிட்டல் போா்டுகளை அகற்றிட பிப். 5ஆம்தேதி அனைத்து கட்சி நிா்வாகிகளை அழைத்து 8ஆம்தேதிக்குள் அகற்றிட சம்பந்தப்பட்ட கட்சி நிா்வாகிகளுக்கு தெரிவிப்பது. அவ்வாறு அகற்றாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசுதுறை மூலம் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்என முடிவு செய்யப்பட்டது. பாஜக நிா்வாகி மீது மிரட்டல் விடுத்த நபா் மீது காவல்துறை மூலம் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படிபோராட்டக்குழுவினா் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com