விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிகிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிகிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 5ஆவது கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் ராதாகிருஷ்ணன் (52). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பேத்தியுடன் பைக்கில் சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவா் சிலை அருகேயுள்ள மருந்துக் கடைக்கு சென்றுவிட்டு சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, அவரது பைக்கும், புதுக்கிராமம் 2ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகனான கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (24) ஓட்டிச் சென்ற பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த இசக்கிமுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com