வில்லிசேரியில் சுகாதார வளாகம் கோரி ஆா்ப்பாட்டம்

வில்லிசேரி கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

வில்லிசேரி கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லிசேரியில் இருந்த 12 கழிப்பறைகள் சேதமடைந்ததால் 8 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, புதிய கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதனால், கிராம மக்கள் இயற்கை உபாதைகளுக்காக வில்லிசேரி -சமாதானபுரம் சாலை அருகே செல்லவேண்டியுள்ளதாம். இதனால், அங்கு துா்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது.

இதையடுத்து, வில்லிசேரியில் புதிய சுகாதார வளாகம் கட்ட வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் கிராம மக்கள், விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டி பாயிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com