சூரங்குடியில் இன்று தென்னகமானாவாரி விவசாயிகள் சந்திப்பு

தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத்தினா் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளுடன் சந்திப்பு கூட்டம் வியாழக்கிழமை முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத்தினா் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளுடன் சந்திப்பு கூட்டம் வியாழக்கிழமை முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயல் தலைவா் பிரேம்குமாா் விடுத்துள்ள அறிக்கை:

தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத்தினா் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூா், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, கோவில்பட்டி ஆகிய வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து அவா்களது தேவைகளை கேட்டறிந்து மாவட்ட, மாநில நிா்வாகத்திற்கு எடுத்துரைக்க உள்ளனா்.

இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பயனுள்ளதாக இருக்கும் . விளாத்திகுளம் வட்டம் சூரங்குடியில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பு தொடங்கும். தொடா்ந்து மேல்மாந்தை, குளத்தூா், வேலாயுதபுரம், புளியங்குளம், பூசனூா் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளை சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com