தூத்துக்குடியில் பெண்ணுக்கு வெட்டு: கணவா் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பிச்சனாா் தோப்பு பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் குணா என்ற பொன் தங்கம் (24). இவரது மனைவி அமராவதி(23). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். மகளிா் சுய உதவிக் குழுவில் தலைவியாக உள்ள அமராவதி, கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் புதுக்கோட்டை அருகே அல்லிகுளத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில் இவா் கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நின்றிருந்தபோது, அங்கு வந்த குணா உள்ளிட்ட சிலா் அமராவதியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், பலத்த காயமடைந்த அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து குணா என்ற பொன்தங்கம், அவரது சகோதரா் முருகன் என்ற மருது (23), உறவினா் முனியன் மகன் வள்ளி (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com