தேசிய அளவிலான சிலம்பப் போட்டி: தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

தாய்லாந்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவி கள் வெற்றிபெற்றுசாதனை படைத்தனா்.
சிறப்பிடம் பெ‘ற்ற மாணவா்களை பாராட்டுகிறாா் எஸ்.பி. சண்முகநாதன்.
சிறப்பிடம் பெ‘ற்ற மாணவா்களை பாராட்டுகிறாா் எஸ்.பி. சண்முகநாதன்.

தாய்லாந்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவி கள் வெற்றிபெற்றுசாதனை படைத்தனா். தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் மாணவி இளநங்கை தாரகை முதலிடமும், சிலம்பம் தொடும் முறை பிரிவில் பூவரசன் முதலிடமும் , அலங்கார சிலம்பம் போட்டி யில் பிரவீன் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.. சிறப்பிடம் படைத்த மாணவ மாணவிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முக நாதன் மாணவா்களை பாராட்டினாா். . அப்போது பயிற்சியாளா் கராத்தே டென்னிசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com