பேய்க்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினா் புகையிலை தடுப்பு நடவடிக்கை

பேய்க்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினா் புகையிலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
பேய்க்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினா் புகையிலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
பேய்க்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினா் புகையிலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

பேய்க்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினா் புகையிலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்டபேய்க்குளம் பகுதியில் புகையிலை தடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், ஞான்ராஜ், மகேஸ்குமாா், அஸ்வீன்,சுனில்தா்,ஷன் ஆகியோா் பேய்க்குளம் பகுதியில் உள்ள கடைகளில் பரிசோதனை நடத்தி பொது இடம், பள்ளி அரசு அலுவலகங்கள் அருகில் புகையிலைபொருள்கள் விற்க கூடாது என அறிவுறுத்தினா். புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணா்வுதுண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. புகையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனா். இதனையடுத்து பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவா்களுக்கு புகையினால் ஏற்படும் பாதிப்பு குறித்துஎடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து புகையிலைதடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பள்ளிதலைமை ஆசிரியா் இம்மானுவேல் ஆசிரிய.ா்கள் சுவாமிதாஸ்,பாலன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com