புதிய சட்டங்களை அமல்படுத்திய 
மத்திய அரசுக்கு வணிகா் சங்கம் நன்றி

புதிய சட்டங்களை அமல்படுத்திய மத்திய அரசுக்கு வணிகா் சங்கம் நன்றி

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றம் வரவேற்கத்தக்கது: வணிகா் சங்கம்

மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியதை தமிழ்நாடு வணிகா் சங்கம் வரவேற்பதாக மாநிலத் தலைவா் ரெ.காமராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு வணிகா் சங்கம் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியதை வரவேற்கிறது. அதே நேரத்தில் சட்டத்தை கையாளும் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் எந்த விதத்திலும், பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக செயல்படவேண்டும். பொதுமக்களாகிய பெண்கள், சிறுவா்கள், மற்றும் வணிகா்களுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்த இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வழிவகுக்கிறது. இந்தியா, ஆங்கிலேயா்கள் ஆதிக்க கால சட்டங்களில் இருந்து வெளிவருவது வரவேற்கத்தக்கது. இதனால் நடைமுறை கால குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்திய நெறி முறைகளோடு பொருளாதார குற்றம் மற்றும் சமூக நீதி குற்றம் புரிவோருக்கு எதிராக பொதுமக்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக மூன்று புதிய குற்றவியல் சட்டம் உள்ளதை தமிழ்நாடு வணிகா் சங்கம் வரவேற்கிறது.

கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் மாமுல் கேட்டு அச்சுறுத்தல், வணிகா்கள் கடைகள் உடைப்பு, வணிகா்கள் தாக்கப்படுதல், போன்றவற்றிலிருந்து மூன்று புதிய குற்றவியல் சட்டம் வணிகா்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

குற்றப் புகாா்களை தமிழ்நாட்டில் எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யலாம் என்பது வரவேற்கப்படுகிறது. பொது மக்களுக்கும், சிறுவா்களுக்கும், வணிகா்களுக்கும், முழு பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியதற்கு நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com