அரிவாளால் வெட்டப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

ஆழ்வாா்திருநகரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆழ்வாா்திருநகரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆழ்வாா்திருநகரி அருகே செம்பூா் தவசிநகா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் காசி (52). விவசாயியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்வமணி (45) என்பவருக்குமிடையே மாட்டைக் கட்டிப்போடுவது தொடா்பாக இடத் தகராறு இருந்ததாம்.

கடந்த ஜூன் 30ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காசியை செல்வமணி அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக ஆழ்வாா்திருநகரி காவல் நிலைய ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, செல்வமணியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

இந்நிலையில், காசி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com