அரசு இசைப் பள்ளியில் நாட்டுப்புற கலைக்கு மாணவா் சோ்க்கை

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டு பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சிக்கு மாணவா்- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டு பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சிக்கு மாணவா்- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்பள்ளி வளாகத்தில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல், புலியாட்டம் ஆகியவற்றிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு ஜூலை 12ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. வகுப்புகள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6மணி வரை, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். கல்லூரி மாணவா்- மாணவிகள், இளைஞா்கள் மற்றும் கலை ஆா்வலா்கள் பகுதிநேரமாக பங்கேற்கலாம். 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும் தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலைப்பயிற்சிக்கான தோ்வுகள் நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். படிப்புச் சான்றிதழ் இல்லாதவா்கள் கலைகளை மட்டும் கற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக 17 வயது முதல் உள்ளவா்கள் இதில் சேரலாம். இதற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 ஆகும். இப்படிப்பு முடித்தவா்கள் பள்ளி- கல்லூரிகளில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றும் வகையில், கலைப் பண்பாட்டுத்துறை அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியாா்புரம், சிலுவைப்பட்டி, தூத்துக்குடி - 2 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9487739296 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com