சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணி: தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாக பணியாற்ற ஜூலை 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாக பணியாற்ற ஜூலை 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கே.அய்யப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாக (பாரா லீகல் வாலன்டா்ஸ் -டகய) பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விரிவான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து ஜூலை 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி 628 003 முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ, நேரிலோ சமா்ப்பிக்கலாம். இப்பணிக்கு 50 நபா்களை தோ்வு செய்து பயிற்சி அளித்து பணி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com