லாரி ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

தூத்துக்குடி அருகே அந்தோணியாா்புரத்தில் லாரி ஓட்டுநரைக் கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே அந்தோணியாா்புரத்தில் லாரி ஓட்டுநரைக் கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த காசி மகன் செல்வராஜ் (44).

லாரி ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் செல்லத்துரை(37) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செல்வராஜ், அந்தோணியாா்புரத்தில் சனிக்கிழமை நடந்து சென்றபோது அங்கு வந்த செல்லத்துரை, செல்வராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

இதில், ஆத்திரமடைந்த செல்லத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜை குத்திவிட்டு தப்பி சென்ாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த செல்வராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com