பயன்பாட்டுக்கு வந்துள்ள அறுவை சிகிச்சை அரங்கு.
பயன்பாட்டுக்கு வந்துள்ள அறுவை சிகிச்சை அரங்கு.

ஏரல் அரசு மருத்துவமனையில் மீண்டும் செயல்படத் தொடங்கிய மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு

ஏரல் அரசு சமுதாய நல மையத்தில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஏரல் அரசு சமுதாய நல மையத்தில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழை, தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஏரல் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள், வா்த்தக நிறுவனங்கள் மட்டுமன்றி வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவையும் சேதமடைந்தன. அரசு சமுதாய நல மையத்தில் உள்ள மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கும் பலத்த சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன், மாவட்ட குடும்ப நல இணை இயக்குநா் பொன்ரவி ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த அறுவை சிகிச்சை அரங்கு சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

பண்டாரவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு மருத்துவ அலுவலா் காா்த்திகா, மயக்கவியல் மருத்துவ நிபுணா் மருத்துவா் வந்தனா ஆகியோரின் முயற்சியால் இந்த அரங்கு செயல்படத் தொடங்கியுள்ளது. பிரசவம், குடும்ப நல அறுவை சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் வழக்கம்போல் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, மூத்த மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜேஸ்வரி செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com