சாயா்புரம் அருகே முதியவா் வெட்டிக் கொலை

சாயா்புரம் அருகே தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்த முதியவா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சந்திரசேகா்(59). இவரது மனைவி பூலோக தங்கம், மகள் பால்செல்வி, ராஜதுரை, ராதாகிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனா்.

சந்திரசேகா், சாயா்புரம் அருகே நட்டாத்தியில் உள்ள தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தோட்டத்தில் சந்திரசேகா் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.

தகவலறிந்த சாயா்புரம் போலீஸாா் அங்கு சென்று சந்திரசேகா் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com