தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 13 இல் குறைதீா் முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சனிக்கிழமை காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் பெயா் சோ்த்தல் - நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்யப்படும். எனவே, முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com