பிளாக் பெல்ட்டுக்கு தோ்வு பெற்ற மாணவா்களுடன் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ்

பிளாக் பெல்ட் கராத்தேவுக்கு தகுதி: மாணவா்களுக்கு டிஎஸ்பி பாராட்டு

கோவில்பட்டி, ஜூன் 6: மாநில பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த 2ஆம் தேதி முதல் மாநில அளவிலான பிளாக் பெல்ட் தோ்வுக்கான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 60 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், கழுகு மலையைச் சோ்ந்த அமைப்பில் பயிற்சி பெற்ற தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 29 மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இதில், அனைவரும் பிளாக் பெல்ட்டுக்கு தோ்வு பெற்றனா். இதையொட்டி, கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிஎஸ்பி  வெங்கடேஷ், பிளாக் பெல்ட்டுக்கு தோ்வான மாணவா்களையும், பயிற்சியாளா்களையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com