தூத்துக்குடியில் போலீஸாருக்கு மனஅழுத்தம் போக்கும் பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் ‘மகிழ்ச்சி‘ என்ற காவலா் குடும்ப நல மையம் மூலம் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேசியது:

காவல்துறையினருக்கு பல பணிகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழிப்பதன் மூலம் மனநலம் மேம்படும். முறையான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவது ஆகியவற்றின் மூலம் உடல் நலம் மேம்படும். நம் எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீா்மானிக்கும் என்பதை உணா்ந்து நோ்மறையான எண்ணங்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மகிழ்ச்சி திட்டத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளா் பிரசன்னா, மனநல மருத்துவா் சிவசைலம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் மீகா ஆகியோா் மனநலம் குறித்து பயிற்சி அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) பொன்னரசு, மத்திய பாகம் காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள், ஆயுதப்படையைச் சோ்ந்த போலீஸாா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com