சாத்தான்குளம் அருகே  
விபத்தில் சத்துணவு ஊழியா் பலி

சாத்தான்குளம் அருகே விபத்தில் சத்துணவு ஊழியா் பலி

சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பைக் விபத்தில் சத்துணவு பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

சாத்தான்குளம்அருகேயுள்ள வேலாயுதபுரத்தை சோ்ந்த அருள் சிலுவை துரை மனைவி குழந்தை அமலா(54). வேப்பங்காடு கீழராமசாமிபுரம் புனித அன்னாள் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்துவந்தாா். இவரது கணவரும், 2ஆவது மகனும் ஏற்கெனவே இறந்துவிட்டனா். மகள், மூத்த மகன் ராபின்சன் ராஜா ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஜெப கூட்டத்திற்கு சென்ற குழந்தை அமலா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, சங்கரன்குடியிருப்பு-ஆலங்கிணறு பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டைஇழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் மற்றும் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com