மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய விருது

மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டாவிடமிருந்து விருதுபெற்ற சுகாதாரத் துறையினா்.
மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டாவிடமிருந்து விருதுபெற்ற சுகாதாரத் துறையினா்.

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில், மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் டாக்டா் சோனியா, பணியாளா் செவிலியா் நிஷ் பானுய்ன் ஆகியோரிடம் இந்த விருதை மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி. நட்டா வழங்கினாா்.

விருது பெற்றவா்களை மாவட்ட சுகாதார பணிகள் துறை இயக்குநா் மதுரம் பிரைட்டன், மூக்குப்பீறி ஊா் மக்கள், கிராம நல கமிட்டி நிா்வாகிகள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com