கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

வழக்கை வாபஸ் பெறக் கோரி தொழிலாளி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு தொழலாளியை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வழக்கை வாபஸ் பெறக் கோரி தொழிலாளி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு தொழலாளியை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் முத்துக்குமாா் (34). தொழிலாளியான இவரது வீட்டுக்கு, அதே ஊா் மேற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் இசக்கிபாண்டி (37) என்பவா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீவைத்தாராம். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக முத்துக்குமாருக்கும், இசக்கிபாண்டிக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி முத்துக்குமாா் தனது மனைவி, மகனுடன் பைக்கில் இரட்டைக் கிணறு பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது இசக்கிபாண்டி, தெற்கு வெங்கட்ராயபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் விஜயகுமாா் ஆகியோா், வீட்டுக்கு தீ வைத்தது தொடா்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், அவரது மாமியாரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, குடும்பத்தினரை லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு முத்துக்குமாா் புகாா் செய்தாா். அதன்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன், வழக்கு பதிந்து இசக்கிபாண்டியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகிறாா். இசக்கிபாண்டி மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவா் ரௌடி பட்டியலில் உள்ளாா் என போலீசாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com