சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருக்கோளூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் சண்முகவேல் (82). கடந்த 2021-இல் 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சண்முகவேலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம் சாட்டப்பட்ட சண்முகவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் முத்துலெட்சுமி ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com